Posts

Showing posts from November, 2019

Stop Talking & Start Listening to Your Breath

Image
  Spiritual journey is needed for calming a hyperactive mind. Sidda purushas have immense powers. They are catalysts in our spiritual journey. Whenever we visit a Samadhi, our mind gets lot of peace. Be it Arvind Ashram & Mother in Pondicherry or Shirdi Sai baba or Satya Sai Baba or Mantralayam Shri Raghavendra Swami – there is something about siddha purushas that we cannot deny….there is an unexplained power. Praying to siddars will make us happy and wipe away our tears. Tiruvannamalai Ramana Maharishi, Seshadri Swamigal, Yogi Ramsuratkumar – they are gurus who have really helped us. Even our revered Shankaracharyas are divine souls – thinking about them, looking at the sacrifices that they have made makes us happy and contented. Kanchi Maha periyaval, Sringeri Maha Periyaval – they have done so much for our Tamil Brahmin community that we can never ever tire of speaking about them. Everyone wants a disease-free life. We want a life where there is abundance of happiness and po...

துர்கா ராணி சிங்க்

Image
  விவாகரத்தான ஒரு பெண். வெஸ்ட் பெங்காலில் க்ளிம்போங் என்கிற இடத்தில் ஒரு ஸ்கூலில் கிளெர்க் ஆக வேலை பார்க்கிறார். அங்கே மினி என்கிற ஆறு வயது பள்ளி மாணவி. கிளாசில் இந்த மாணவி தூங்கி வழிகிறாள் என்று ஆசிரியர் புகார் கொடுக்க, இந்த பெண் (பெயர் : துர்கா ) அந்த சிறு குழந்தையிடம் விசாரிக்கிறர். அந்த பிஞ்சு சொல்கிறது - " அவன் என்னை ராத்திரி தூங்க விட மாட்டேங்கிறான்." பாலியல் வன்மத்துக்கு சிறிய வயதில் ஆளான துர்காவுக்கு பகீர் என்கிறது. அந்த குழந்தையைக் காப்பாற்றும் போது துர்கா படும் துன்பங்கள், போலீஸ் ஏன் அவரைத் துரத்துகிறது - இது தான் கதை. துர்காவின் துக்கம் நிறைந்த கடந்த காலம், தன்னை மாதிரி மினி என்கிற அந்த பிஞ்சு கஷ்டப் படக்கூடாது என்கிற மனித நேயம் வித்யா ஒரு சிறந்த நடிகை என்று பறைசாற்றுகிறது, சுஜோய் கஹோஷ் படத்தை விறு விறுப்பாகக்கொண்டு சென்று இருக்கிறார். கிளைமாக்ஸில் படம் சொதப்பி விட்டது உண்மை தான் என்றாலும் படத்தை வேறு எப்படி முடித்து இருக்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. ப்ராம்மணப் பெண்ணான வித்யா கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். அந்த இரண்டு மணி நேரத்தில் வித்யா பாலனைப் பார்க்க...

கண்ணீர் வர வழைக்கும் ஷீர்டி சாய்பாபாவின் கடைசி நாட்கள்

Image
  இந்தக்கட்டுரை சாய் சத்சரித்ராவில் இருந்து எழுதப்பட்டுள்ளது. சத் குருவை த்யானம் பண்ணப்பண்ண நம் கவலைகள் தீரும் என்பது உறுதி. சாய் பாபாவின் கதையைப் படிக்கும் போது நம் மனம் தூய்மை அடையும். செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி. 1918 வருடம். பாபாவிற்கு லேசாக ஜுரம் இருந்தது. பாபா சோர்வாகக் காணப்பட்டார். உடல் நலிவடைந்தது. சாப்பிட்டுவதை பாபா அறவே நிறுத்தி விட்டார். பதினேழாவது நாள் (15 அக்டோபர் 1918 ) அன்று பாபா தனது பூத உடலைத் துறந்தார். அன்று செவ்வாய்க்கிழமை. மதியம் இரண்டரை மணிக்கு பாபா முக்தி அடைந்தார். தனது பக்தர்களுக்கு 1916 வருடமே பாபா இதை மேற்கோள் காட்டி விட்டார், ஆனால் அப்போது ஒருவருக்கும் புரியவில்லை. அன்று விஜயதசமி. டஸ்ஸரா நாள். சுபிக்ஷமான நாள் என்று அனைவரும் அறிந்ததே, வெளியே சென்ற கிராமத்து மக்கள் திரும்பிக்கொண்டிருந்தனர். திடீர் என்று பாபாவுக்கு தலை கால் புரியாமல் கோபம் வந்து விட்டது. தனது அனைத்து உடைகளையும் கழட்டினார் பாபா - தலையில் அணிந்து இருந்த துணி, கோவணம் , மேலாடை என்று. தனது ஆடைகளை துனி எனப்படும் நெருப்புக்கு இரை ஆக்கினார் பாபா. ஜிவாலை பெரிதாக எரிந்தது. பாபாவின் முகத்தில் அப்படி...

அப்பா அம்மா & அமெரிக்கா

Image
  சமீபத்தில் கே. பாலச்சந்தரின் "அவர்கள்" (1977 ) பார்த்தேன். ப்ராஹ்மண துவேஷி மாதிரி அவர் நடந்து கொண்டாலும், 1977 வருடத்திலியே முற்போக்கான சிந்தனைகளை சினிமாவில் காட்டியதற்கு அவரைப் பாராட்டியே ஆக வேண்டும். சிறிய வயதில் இந்த படத்தைப் பார்த்திருந்தாலும் மறுபடியும் ஒரு முறை பார்க்கும் போது நினைவுகள் மலர்ந்தன. இப்படத்தில் கன்னட நடிகை லீலாவதியின் நடிப்பைப் பார்த்து அசந்து விட்டேன்... அனுவாக நடித்து இருந்த சுஜாதாவுக்கு ஆயாவாகவும் மாமியாராகவும் நடித்து தனது நடிப்பின் மூலம் கண்களில் நீரை வரவைத்து விட்டார். அதுவும் அந்த கடைசிக் காட்சி... கண் முன்னே நிற்கிறது. பிள்ளையை எதிர்த்து மருமகளுக்கு துணையாக இருந்து விட முடிவு செய்யும் இடத்தில் நிமிர்ந்து நிற்க வைக்கிறது லீலாவதியின் அபார நடிப்பு. பாலக்காடுத் தமிழ் பாஷையில் கலகலக்கவும் கண் கலங்கவும் வைக்கிறார் கமல். அந்த பழைய கமல் மாதிரி நடிகரை இனிமேல் எங்கே பார்ப்பது? Digressions apart , இந்த மாதிரி மாமியாரை பார்க்க முடியுமா - இப்போதுள்ள இன்டர்நெட் யுகத்தில். தொலைக்காட்சித் தொடரே தவமாக கிடக்கும் மாமியார்கள் தான் இப்பொழுது ஜாஸ்த்தி. சிவாஜி பாடின - ...

புத்துணர்ச்சி தரும் புதம்மன்

Image
குலதெய்வத் கோவில்களுக்கு சென்று வந்த பின்னர் அதன் தாக்கம் ரொம்ப நாள் இருக்கும் என்பது சத்யமான உண்மை. இஷ்ட தெய்வங்களின் கோவில்களுக்குச் சென்று வந்த பின்னரும் அதே மாதிரி உணர்வுகள் தான் நம்மிடம் இருக்கும். நிறையக் குடும்பங்களில் இதற்கு சரியான முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பது தான் உண்மை. இக்கோவில்களுக்கு சென்று விட்டு வரும் போது சிரமம் இருந்தாலும் அவற்றை மிகை படுத்தக் கூடாது. களக்காடு புதம்மன் கோவில் சென்று விட்டு வந்த பிறகும் அதே மாதிரி ஒரு மன அமைதி கிட்டியது எங்களுக்கு. திருநெல்வேலியிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது களக்காடு என்கிற சிறிய குக்கிராமம். பசுமை நிறைந்த பூஞ்சோலை என்று கூட களக்காடு ஊரைக் குறிப்பிடலாம். பக்கத்தில் உள்ள வள்ளியூர் மாதிரி களக்காடு இன்னமும் முன்னேற்றம் அடையவில்லை என்றாலும் களக்காடு ஊருக்குத் தனி அழகு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. களக்காடு ஊரில் உள்ள கோவில்கள் பின் வருமாறு சத்யவாகீஸ்வரர் சமேத கோமதி அம்மன் கோவில் உள்ளது. இதை பெரிய கோவில் என்று மக்கள் பாசத்துடன் அழைக்கிறார்கள். பின்னர் பெரிய தெருவின் முகப்பில் மற்றுமொரு பிள்ளையார் கோவில் உள்ளது. பஸ...

Why should development always be at the cost of destroying the green cover?

Image
  The Kalasipalayam bus stand in Bangalore is on the verge of a make-over. Many trees around the bus-stand that have existed for many years are now facing the threat of being mercilessly hacked.  The reckless destruction of this green cover will mean that many birds –for whom the trees were a home for more than 30 years – will lose their shelter. Even as we were trying to suppress our frustration on learning about the proposed felling of many trees to make way for the steel flyover, this development has come as a shocker for denizens of this city which is fast losing its prestigious tag of garden city of India.  Many trees have been axed to construct a skywalk over the busy Esteem mall junction. When questioned about the destruction of green cover for modernizing the Kalasipalayam bus stand, the authorities have brushed it off saying that their plan is already under execution and there is no way something could be done to salvage matters. No prizes for guessing that conse...

Fighting Stress!

Image
  Stress has become endemic in today’s modern world. Whether it is a housewife or a student or an employee working in an organization or a senior citizen – everyone is living a life that is characterized by copious amounts of anxiety and nervousness. Those who are perfectionists (Type A personalities) suffer even more. For them, every day begins with a series of tasks on their to-do-list that has to be completed. There are “n" number of services that are now available to supposedly provide solace to you – but they can create a big hole in your pocket. Here are 7 ways that you can beat stress and say goodbye to anxiety Keep your mind active and busy – but learn to relax. Remember the old adage – “An idle mind is devil’s workshop”. Keep your mind engaged at all times. Learn to relax in between. Do activities like cooking or writing or listening to music that have a therapeutic effect. Taking a cat-nap in between is not a crime. Homemakers can try different recipes and delight their ...

நீ வருவாய் என

Image
  நீ வருவாய் என காத்திருந்தேன்    ஆனால் நீ வரவில்லை!    என் மேல் அப்படி என்ன உனக்குக் கோபம்    காத்திருத்தல் வழக்கமாகிவிட்டதே   ஆனால் ஒப்புக்கொள்கிறேன்   சில சமயங்களில் காத்திருத்தல் சுகமானது   உன் மீது தலை சாய்த்து   இனிய இசை காதோரம் ஒலிக்க   தென்றல் காற்றில் தலை முடி பறக்க   அந்த இன்பத்தை என்னவென்று சொல்ல?   எத்தனை வருட தொடர்பு   எத்தனை பாசம் எத்தனை நேசம்   நமக்குள் உள்ள பந்தம் இன்று நேற்றா? எத்தனையோ வாகன நெரிசல்களுக்கு மத்தியில் நான் உன்னிடம் சரணடைந்துஇருக்கிறேன் வெய்யிலோ மழையோ பனியோ நம் சந்திப்புகள் தொடர்ந்துஇருக்கின்றன இந்த பந்தத்தை உடைக்கலாமா? நேசத்தை மறக்கலாமா? நீ இன்றி நானில்லை நான் இன்றி நீயில்லை நீ வர வேண்டும் நிச்சயம் வருவாய் என நம்பிக்கை மட்டும்! (பஸ்சுக்காக காத்திருக்கும் பயணி ஒருவரின் இதயக்கூவல் இது)

IdhayaKamalam - இதயக்கமலம்

Image
  மராத்தி மொழியில் 1964ல் வெளி வந்த படம் - பாட்லாக்; படம் ஒரு மராத்தி நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. ஜெயந்த் என்பவர் எழுதிய "ஆஷா பரத் ஏதே" என்ற கதையின் தழுவல் தான் படம். பிரபலமான வக்கீல் - வெளிநாட்டுக்கு செல்ல நேரிடுகிறது. கணவன் மனைவிக்குள் அப்படியொரு அன்யோன்யம். மனைவியைப் பிரிய மனமில்லாமல் வக்கீல் தொலை தூரப் பயணம் மேற் கொள்கிறார். ஒரு இரவு கதவு தட்டபட மனைவி திகைக்கிறாள் - வந்திருப்பது அவளது தங்கை - அவளை மாதிரியே இருக்கும் அவள் தங்கை. தங்கை நிலைமை படு மோசமாக இருக்கிறது. பல வருடங்களாகப் பிரிந்து இருந்தாலும், ரத்த பாசம் இவளைப்பதற வைக்கிறது. மருந்து வாங்க வெளியே போக வேண்டும். எப்படி போவது? இரு சகோதரிகளும் உடைகளை மாற்றிக்கொள்கிறார்கள். வக்கீலின் மனைவி டாக்டர் கிளினிக் போகும் வழியில் தங்கையின் கணவன் இவளைத் தன் மனைவி என்று எண்ணி கடத்திக்கொண்டு போய் விடுகிறான், தங்கை கொள்ளைக்காரக்கும்பலைச் சேர்ந்தவள். இங்கே வக்கீல் வீட்டில் ஒரே அமளி துமளி. மருமகள் இவ்வளவு சீரியஸ் என்று நம்ப முடியாமல் டாக்டர் வரவழைக்கப்படுகிறார். முயற்சி வீண். மனைவி இறக்க வக்கீல் கதறித்துடித்துக்கொண்டு வருகிறார். உண்ம...

My eBooks