கண்ணீர் வர வழைக்கும் ஷீர்டி சாய்பாபாவின் கடைசி நாட்கள்
இந்தக்கட்டுரை சாய் சத்சரித்ராவில் இருந்து எழுதப்பட்டுள்ளது. சத் குருவை த்யானம் பண்ணப்பண்ண நம் கவலைகள் தீரும் என்பது உறுதி. சாய் பாபாவின் கதையைப் படிக்கும் போது நம் மனம் தூய்மை அடையும். செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி. 1918 வருடம். பாபாவிற்கு லேசாக ஜுரம் இருந்தது. பாபா சோர்வாகக் காணப்பட்டார். உடல் நலிவடைந்தது. சாப்பிட்டுவதை பாபா அறவே நிறுத்தி விட்டார். பதினேழாவது நாள் (15 அக்டோபர் 1918 ) அன்று பாபா தனது பூத உடலைத் துறந்தார். அன்று செவ்வாய்க்கிழமை. மதியம் இரண்டரை மணிக்கு பாபா முக்தி அடைந்தார். தனது பக்தர்களுக்கு 1916 வருடமே பாபா இதை மேற்கோள் காட்டி விட்டார், ஆனால் அப்போது ஒருவருக்கும் புரியவில்லை.
அன்று விஜயதசமி. டஸ்ஸரா நாள். சுபிக்ஷமான நாள் என்று அனைவரும் அறிந்ததே, வெளியே சென்ற கிராமத்து மக்கள் திரும்பிக்கொண்டிருந்தனர். திடீர் என்று பாபாவுக்கு தலை கால் புரியாமல் கோபம் வந்து விட்டது. தனது அனைத்து உடைகளையும் கழட்டினார் பாபா - தலையில் அணிந்து இருந்த துணி, கோவணம் , மேலாடை என்று. தனது ஆடைகளை துனி எனப்படும் நெருப்புக்கு இரை ஆக்கினார் பாபா. ஜிவாலை பெரிதாக எரிந்தது. பாபாவின் முகத்தில் அப்படியொரு ஒளி ..... தீப்பிழம்பாக ஜொலித்த அவர் முகத்தைப்பார்த்து கிராம மக்கள் பீதி அடைந்தனர். "அடே எல்லோரும் என்னை உற்று பாருங்கள். இப்போது சொல்லுங்கள். நான் இந்துவா இல்லை முஸ்லிமா என்று" பாபா கத்தினார்.
ஒருவருக்கும் பாபாவை நெருங்குவதற்கு தைர்யம் வரவில்லை. நடுங்கினார்கள் கிராமத்து மக்கள். சில நிமிடங்கள் கடந்தன. தொழு நோயாளியான பாகோஜி ஷிண்டே எனும் பத்தர் பாபாவை நெருங்கினார். பாபாவை செல்லமாக கோவித்துக்கொண்டார். பாபாவின் இடுப்பில் கோவணத்தைக் கட்டினார் ஷிண்டே. " பாபா இன்னைக்கு தசரா நாள். அது தான் எல்லோரும் வெளியே போயிருந்தா" என்றார் ஷிண்டே. பாபா தரையில் குச்சியால் தட்டினார். " இது எனது வெளியூர் பயணம்" என்று சூட்சுமமாக கூறினார். இரவு பதினோரு மணி வரை பாபாவின் உக்கிரம் தணியவில்லை எனலாம். "சாவடி" எனப்படும் ஊர்வலம் அன்று நடக்குமா என்று மக்களுக்கு சந்தேகம் வந்தது. ஒரு மணிக்கூர் ஆன பின்பு சாய்பாபா கோபம் தணிந்து காணப்பட்டார்,.தனது உடைகளை அணிந்து கொண்டு சாய்பாபா ஊர்வலத்தில் கலந்து கொண்டார். மக்கள் மகிழ்ச்சியை அடைந்தனர். பாபாவின் கோபத்தில் உள்ள உள்ளர்த்தம் என்ன தெரியுமா?
அடுத்த தசரா போது நான் கடவுளடியில் இருப்பேன் என்பது தான். ராமச்சந்திர பாட்டில் எனும் அன்பார் தீவிர நோய்வாய்ப்பட்டு இருந்தார். நிலைமை மோசமாகி விட்டது. இன்றோ நாளையோ என்று உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது, ஒரு விதமான சிகிச்சையும் பலன் அளிக்கவில்லை. ஓர் இரவு பாபா அவர் தலையணை அருகில் நின்றார். பாட்டில் கண்ணீருடன் பாபாவின் கால்களை ப் பற்றி கொண்டார். " எனக்கு எப்போது விடுதலை கிடைக்கும் பாபா?" என்று வினவினார். பாபா அவருக்கு ஆசுவாசம் அளித்தார் - " கவலை வேண்டாம், உன் உடல் குணமாகி விடும். நீ பிழைத்து விடுவாய். ஆனால் அடுத்த வருடம் தசரா வரையில் தாத்யா பாட்டில் உயிரோடு இருப்பாரா தெரியவில்லை. இந்த விஷயத்தை தாத்யாவிடம் சொல்ல வேண்டாம். அவர் பயந்து விடுவார். " ராமச்சந்திர பாட்டில் குணம் அடைந்து விட்டார் ஆனாலும் தாத்யாவை நினைத்து மனம் வருந்தினார். பாபாவின் சொல் வேத வாக்கு ஆயிற்றே. அவர் ஒருவரிடமும் இதைப்பற்றி மூச்சு விடவில்லை. ஆனால் தையல்காரர் ஆன பாலாவிடம் மட்டும் இதைப் பகிர்ந்து கொண்டார்.
இருவரும் அரண்டு போய் இருந்தார்கள் - தாத்யாவுக்கு என்ன ஆகுமோ என்று. சில நாட்களில் ராமச்சந்திரா பூரண குணம் ஆகி விட்டார். பாபா வாக்கு பலித்தது. பாபாவின் கூற்றுப்படியே தாத்யா நோய்வாய்ப்பட்டார். அவரால் பாபாவின் தரிசினத்திற்கு வர இயலவில்லை. சாய் பாபாவுக்கு ஜுரமாக இருந்தது. தாத்யாவுக்கு சாய்பாபாவின் மேல் அப்படியொரு நம்பிக்கை சாய்பாபாவுக்கோ ஹரியின் மேல் பூரண நம்பிக்கை, ஹரி நம்மை எல்லாம் காப்பாற்றுவார் என்ற திடமான நம்பிக்கை இருந்தது, நேரம் ஆக ஆக பாபாவின் நிலைமை மோசம் அடைந்தது என்றால், தாத்யாவின் நிலைமையோ படு மோசம் ஆகி விட்டது. விஜயதசமி நாள் வேறு நெருங்கிக்கொண்டிருந்தது. இதனால் ராமச்சந்திரா பாட்டிலும் தையல்காரரும் மேலும் கலக்கம் அடைந்தனர். விஜயதசமி அன்று தாத்யாவின் நாடி குறைந்துகொண்டே வர அவர் முடிவு உறுதியான மாதிரி இருந்தது, ஆனால் அதிசயமாகத் தாத்யாவின் மரணம் தவிர்க்கப்பட்டு பாபா இயற்கை எய்தினார் .
ஏதோ ஒரு பரிமாற்றம் நடந்த மாதிரி இருந்தது. சாய்பாபா தனது பக்தருக்கு நேர விருந்த மரணத்தை தவிர்த்து விட்டார் என்று அனைவரும் அபிப்ப்ராயப்பட்டனர். ஆனால் சாய்பாபா எதற்காக அப்படி செய்ய வேண்டும்? இது சாய்பாபாவுக்கே புரிந்த புதிர் எனலாம். அடுத்த நாள் காலை சாய்பாபா தனது தீவிர பக்தரான தாஸ் கணுவின் கனவில் வந்தார். " மசூதி இடிந்தது ; ஷிர்டியின் என்னை வியாபாரிகளும் கடைக்காரர்களும் என்னை பரிகாசம் செய்தனர். ஆதலால் நான் விடை பெறுகிறேன். " நீ உடனே எனது மசூதிக்கு சென்று என்னைப் பூக்களால் போர்த்தவும்". தாஸ் கணுவும் அவரது சீடர்களும் மசூதிக்கு வந்தனர். பாபாவின் பெயரில் பஜனைகள் நடத்தினர். ஒரு அழகான பூ மாலையை அணிந்த தாஸ் கணு பிறகு அந்த மாலையை பாபாவின் சமாதிக்கு அணிவித்தார், ஹரி நாமத்தைக் கூறிக்கொண்டே அனைவருக்கும் அன்ன தானம் நடந்தது, புனிதமான தசரா நாளை தனது இறுதி பயணத்துக்கு தேர்ந்து எடுத்த சாய் பாபாவின் சக்தியை என்னவென்று சொல்ல? இது ஒரு அற்புதம் என்றால் அது மிகையாகாது. அவரது மறைவுக்கு சில நாட்கள் முன்னால் அவருக்கு உணர்வு இருந்தது. சட் என்று நிமிர்ந்து உட்கார்ந்தார் சாய் பாபா. மக்கள் - சாய்பாபாவுக்கு உடல் தேறி வருகிறது என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர். லட்சுமிபாய் என்கிற பெண்மணிக்கு சாய்பாபா சிறிது பொருள் உதவி செய்ய ஆசைப்பட்டார்.
லட்சுமிபாய் சாய்பாபாவின் தீவிர பக்தை. அவரிடம் சொத்து சுகம் இருந்தது. ஆனால் பாபாவின் மேல் அவ்வளவு ப்ரீத்தியும் பக்தியும் வைத்து இருந்தார். அவருக்கு பாபாவின் மசூதியில் இரவு தங்க அனுமதி இருந்தது. பாபா லஷ்மியை தனது மகளாக கருதினார். தனக்காக அயராது உழைத்த லக்ஷ்மிக்கு பொருள் உதவி செய்ய ஆசைப்பட்டார் சாய் பாபா. ஒரு முறை சாய்பாபா லட்சுமியிடம் பசிக்கிறது என்றார். லக்ஷ்மியும் ரொட்டியும் காய்கறிகளும் பண்ணி கொண்டு கொடுத்தார். பாபா அந்த உணவை ஒரு நாயிடம் கொடுத்த போது லட்சுமி செல்லமாக பாபாவிடம் கோபித்துக் கொண்டார். " என்ன பாபா இது. நான் உங்களுக்காக ஆசை ஆசையாக உணவு சமைத்து கொண்டு வந்தால் நீங்கள் அதை நாயிடம் கொடுக்கிறீர்கள், ஏன் ? " என்று வினவினார், சாய்பாபா சிரித்துக்கொண்டே கூறினார், " எல்லா உயிர்களின் பசியும் ஒன்றுதான் லட்சுமிபாய். அதை மறுக்கக்கூடாது. மறக்கவும் கூடாது, யார் பசியாக இருக்கிறார்களோ அவர்களுக்கு உணவு அளித்தால் அது எனக்கு அளித்த மாதிரி தான்". உலகத்திலேயே பசிக்கொடுமை கொடுமையானது. இதைத்தான் சாய் பாபா தனது பக்தர்களுக்கு உணர்த்தினார் சாய்பாபா சாப்பிட்ட பின்னர் மீதி இருக்கும் உணவை ராதா பாய் எனும் பக்தை அன்புடன் உட்கொள்ளுவது வழக்கம். தன் கைப்பையில் இருந்து முதலில் ஐந்து ரூபாயும் பிறகு நான்கு ரூபாயும் எடுத்த சாய்பாபா அதை லட்சுமி பாயிடம் கொடுத்தார். இதற்கு தாத்பர்யம் என்ன தெரியுமா? இது ஒன்பது வகையான பக்தியை பறைசாற்றுவதாகும்.
லட்சுமிபாய் பணக்காரி ; அவளுக்கு ஒன்பது ரூபாய் பெரிது அல்ல. ஆனால் ஒரு உண்மையான பக்தைக்கு லட்சுமி எடுத்துக்காட்டாக இருந்தாள். சாய் பாபாவும் அதை உணர்ந்து லட்சுமியிடம் ஒரு தந்தையைப் போல பாசம் வைத்து இருந்தார். இந்த மாதிரி ஒரு குரு பக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது அல்லவா? நான் எப்பொழுதும் சொல்வது போல - குருமார்கள், சித்தர்கள். அவர்கள் நாம் கடவுளை அடையும் வழி கூறக்கூடியவர்கள். அவர்களை நாம் கேட்டலிஸ்ட் மாதிரி என்ன வேண்டும். அவர்கள் கடவுளின் பிரதிநிதிகள் எனலாம். கடைசி நேரத்தில் பக்தர்கள் சிரமம் படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்ட பாபா அனைவரையும் மசூதியில் இருந்து வெளியேற்றி விட்டார். அவருக்கு மிக நெருக்கத்தில் இருந்தவர்களையும் சாய்பாபா உணவு அருந்தி விட்டு வர சொன்னார். அவர்களுக்கு ஒரே தர்மம் சங்கடம். பாபாவை விட்டு அந்த மாதிரி நேரத்தில் பிரியவும் மனம் இல்லை. ஆனால் பாபாவின் வேண்டுகோளை மறுக்கவும் இயலாது. அனைவரும் பாபாவிடம் விடை பெற்று உணவு அருந்தச் சென்றனர். அவர்கள் மனமெல்லாம் பாபாவின் நினைப்பிலேயே இருந்தது. சாப்பாடு இறங்கவில்லை. சாப்பிட்டு முடிக்கும் முன்னர் பாபா என்கிற ஒரு ஜோதி, ஒரு ஒளி, ஷிர்டியை விட்டு விடைப் பெற்று விட்டது என்கிற தகவல் அவர்கள் காதுகளை எட்டியது. துடித்து போனார்கள் ஷீர்டி வாழ் மக்கள். மசூதிக்கு ஓடினார்கள் அனைவரும். பாபாவோ பாயாஜியின் மடியில் சாய்ந்து இருந்தார். பாபா கீழே விழவும் இல்லை, படுக்கையில் படுக்கவும் இல்லை. கம்பீரமாக ஒய்யாரமாக உட்கார்ந்தபடியே சமாதி அடைந்தார் சாய் பாபா.
சாய் பாபா மாதிரி ஞானிகள் ஒரு குறிக்கோளாடு தானே இந்த உலகத்துக்கு வருகிறார்கள். தங்கள் பணி முடிந்த பின்னர் அவர்கள் இறைவனைத் தேடிச்செல்லும் பாதையில் சென்று விடுகிறார்கள். கருணைக்கடலான சாய் பாபா என்றும் நம்மோடு இருந்து நம்மை வழி நடத்தி செல்வாராக - நமது பயங்களையெல்லாம் போக்கி, நம்மை நல்வழிப்படுத்தி, நமக்கு நல் எண்ணங்கள் எனும் பரிசினைக் கொடுத்து , நமக்கு அருள் புரிவராக.
ஓம் சாய் நமோ நமஹ , ஸ்ரீ சாய் நமோ நமஹ , ஜெய் ஜெய் சாய் , நமோ நமஹ. ஓம் சாய் நமோ நமஹ , ஸ்ரீ சாய் நமோ நமஹ , ஜெய் ஜெய் சாய் , நமோ நமஹ. ஓம் சாய் நமோ நமஹ , ஸ்ரீ சாய் நமோ நமஹ , ஜெய் ஜெய் சாய் , நமோ நமஹ. ஓம் சாய் நமோ நமஹ , ஸ்ரீ சாய் நமோ நமஹ , ஜெய் ஜெய் சாய் , நமோ நமஹ. ஓம் சாய் நமோ நமஹ , ஸ்ரீ சாய் நமோ நமஹ , ஜெய் ஜெய் சாய் , நமோ நமஹ. ஓம் சாய் நமோ நமஹ , ஸ்ரீ சாய் நமோ நமஹ , ஜெய் ஜெய் சாய் , நமோ நமஹ. ஓம் சாய் நமோ நமஹ , ஸ்ரீ சாய் நமோ நமஹ , ஜெய் ஜெய் சாய் , நமோ நமஹ. ஓம் சாய் நமோ நமஹ , ஸ்ரீ சாய் நமோ நமஹ , ஜெய் ஜெய் சாய் , நமோ நமஹ. ஓம் சாய் நமோ நமஹ , ஸ்ரீ சாய் நமோ நமஹ , ஜெய் ஜெய் சாய் , நமோ நமஹ. ஓம் சாய் நமோ நமஹ , ஸ்ரீ சாய் நமோ நமஹ , ஜெய் ஜெய் சாய் , நமோ நமஹ. ஓம் சாய் நமோ நமஹ , ஸ்ரீ சாய் நமோ நமஹ , ஜெய் ஜெய் சாய் , நமோ நமஹ.
இந்தக் கட்டுரையை நான் எழுத வில்லை. சாய் பாபா தான் அதற்கு வழி வகுத்தார் என்றே எண்ணுகிறேன். ஏதாவது எழுத்து பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் -
Comments
Post a Comment