துர்கா ராணி சிங்க்

 


விவாகரத்தான ஒரு பெண். வெஸ்ட் பெங்காலில் க்ளிம்போங் என்கிற இடத்தில் ஒரு ஸ்கூலில் கிளெர்க் ஆக வேலை பார்க்கிறார். அங்கே மினி என்கிற ஆறு வயது பள்ளி மாணவி. கிளாசில் இந்த மாணவி தூங்கி வழிகிறாள் என்று ஆசிரியர் புகார் கொடுக்க, இந்த பெண் (பெயர் : துர்கா ) அந்த சிறு குழந்தையிடம் விசாரிக்கிறர். அந்த பிஞ்சு சொல்கிறது - " அவன் என்னை ராத்திரி தூங்க விட மாட்டேங்கிறான்." பாலியல் வன்மத்துக்கு சிறிய வயதில் ஆளான துர்காவுக்கு பகீர் என்கிறது. அந்த குழந்தையைக் காப்பாற்றும் போது துர்கா படும் துன்பங்கள், போலீஸ் ஏன் அவரைத் துரத்துகிறது - இது தான் கதை. துர்காவின் துக்கம் நிறைந்த கடந்த காலம், தன்னை மாதிரி மினி என்கிற அந்த பிஞ்சு கஷ்டப் படக்கூடாது என்கிற மனித நேயம் வித்யா ஒரு சிறந்த நடிகை என்று பறைசாற்றுகிறது,

சுஜோய் கஹோஷ் படத்தை விறு விறுப்பாகக்கொண்டு சென்று இருக்கிறார். கிளைமாக்ஸில் படம் சொதப்பி விட்டது உண்மை தான் என்றாலும் படத்தை வேறு எப்படி முடித்து இருக்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. ப்ராம்மணப் பெண்ணான வித்யா கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். அந்த இரண்டு மணி நேரத்தில் வித்யா பாலனைப் பார்க்க முடியவில்லை. துர்கா ராணி சிங்க்கும் வித்யா சின்ஹாவும் தான் தென்படுகிறார்கள். இந்த அளவுக்கு வித்யாவின் நடிப்புத்திறமை அசர வைக்கிறது என்றால் மிகையில்லை.

வாட்ட சாட்டம் நிறைந்த, ஆண்மை நிரம்பிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் ராம்பால். அனாயசமாக நடித்து இருக்கிறர் அர்ஜுன். கொஞ்சம் தலைக்கனம் குறைந்தால் இன்னமும் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். வித்யாவின் விருது வாங்குவதற்கு ஏற்ற நடிப்புக்கு அர்ஜுன் சரியாக ஈடு கொடுக்கிறார். உள்ளத்தைக் கொள்ளை கொள்வது கல்கத்தாவின் தெருக்கள் தான். சந்தன் நகர் - அதன் வெறிச்என்றிருக்கும் தெருக்கள் - இரவு நேரத்தில் ஜொலிக்கும் தெரு விளக்குகள், அந்த சின்னதான வீடு , மேல் வீட்டில் வசிக்கும் தாத்தா, கலிம்பொங்கின் இயற்கை கொஞ்சும் அழகு, அந்த விசாலமான பிரெஞ்சு வில்லா - என்று செட்கள் இல்லாமல் படத்தை ஷூட் பண்ணி இருக்கும் சுஜோய்யை பாராட்டல் வேண்டும்.

கலிம்பொங்கிற்கு போகும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கூடலாம். முக்கிய கதாபாத்திரங்களைத் தவிர அனைத்து துணை நடிகர்களும் பெங்காலி தான். இது தான் சற்றே உறுத்துகிறது. தனது அண்ணனின் பெண்ணை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கும் சித்தப்பா ஜுகல் ஹன்ஸ்ராஜ் மற்றும் பேத்தியை அடக்கும் பாட்டி அம்பா சன்யாலும் மிரள வைத்து வயிற்றில் புளியைக் கரைக்கிறார்கள். படத்துக்கு உயிர் கொடுப்பது பிளஷ்பாக் கட்சிகளும் அடுத்த வினாடி என்ன நடக்க போகிறது என்கிற பார்வையாளர்களின் ஆர்வமும் தான்.

கஹானி (2012 ) படத்தை ஒப்பிடும் போது துர்கா ராணி சிங்க் சற்று சுமார் ரகம் தான் - அதற்கு முக்கிய காரணம் என்ன? முந்தையப் படத்தில் கடைசி வரை சஸ்பென்ஸ் காப்பாற்ற பட்டு இருந்தது. வித்யா பாக்ச்சி கர்ப்பிணியே இல்லை என்று கடைசியில் தெரியும் போது - "திடுக்". ஆனால் இந்தப் படத்தில் முடிவு எதிர்பார்த்தபடி இருப்பது சற்றே ஏமாற்றம் தருகிறது. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் செல்லும் "கஹானி II " ஒரு தடவை கட்டாயம் பார்க்கலாம் - வித்யா பாலனின் சிறந்த நடிப்புக்காகவே.

பின் குறிப்பு படத்தில் வில்லனாக நடித்து இருக்கும் ஜுகல் ஹன்சராஜை நான் 1985 ஆம் வருடம் மும்பை சர்ச்- கேட் ரயில்வே நிலையத்தில் பார்த்து இருக்கிறேன். அப்பொழுது நான் மும்பையின் பிரசித்தி பெற்ற ஜெய் ஹிந்து கல்லூரியில் பிளஸ் ஒன் படித்துக்கொண்டிருந்தேன். ஜுகல் அப்பொழுது பள்ளி மாணவன் - அவர் கூடவே ஒரு வேலை ஆள் இருந்தார். பாந்திராவில் இறங்கினார்கள் இரண்டு பேரும். 2000 வருடம் யாஷ் சோப்ராவால் அறிமுகப்படுத்தப்பட்டாலும் ஜுகல் பாலிவுட்டில் ஜொலிக்கவில்லை. இப்பொழுது வில்லன் ஆக ரி-என்ட்ரி [மறு பிரவேசம்] ஆகி இருக்கிறார்.

Comments

My eBooks

 

     

Popular posts from this blog

Those wonderful terrace memories!

The father who became a star

அந்த ஏழு நாட்கள்