நீ வருவாய் என
நீ வருவாய் என காத்திருந்தேன்
ஆனால் நீ வரவில்லை!
என் மேல் அப்படி என்ன உனக்குக் கோபம்
காத்திருத்தல் வழக்கமாகிவிட்டதே
ஆனால் ஒப்புக்கொள்கிறேன்
சில சமயங்களில் காத்திருத்தல் சுகமானது
உன் மீது தலை சாய்த்து
இனிய இசை காதோரம் ஒலிக்க
தென்றல் காற்றில் தலை முடி பறக்க
அந்த இன்பத்தை என்னவென்று சொல்ல?
எத்தனை வருட தொடர்பு
எத்தனை பாசம் எத்தனை நேசம்
நமக்குள் உள்ள பந்தம் இன்று நேற்றா?
எத்தனையோ வாகன நெரிசல்களுக்கு மத்தியில்
நான் உன்னிடம் சரணடைந்துஇருக்கிறேன்
வெய்யிலோ மழையோ பனியோ
நம் சந்திப்புகள் தொடர்ந்துஇருக்கின்றன
இந்த பந்தத்தை உடைக்கலாமா?
நேசத்தை மறக்கலாமா?
நீ இன்றி நானில்லை
நான் இன்றி நீயில்லை
நீ வர வேண்டும்
நிச்சயம் வருவாய் என நம்பிக்கை மட்டும்!
(பஸ்சுக்காக காத்திருக்கும் பயணி ஒருவரின் இதயக்கூவல் இது)
Comments
Post a Comment