பாலக்காடு அண்ட் லீன்
பாலக்காடு என்கிற ஊர் பிரபலம் ஆவதற்கு சிவாஜி கணேசனும் காரணம் எனலாம். "பாலக்காடு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா அவன் குழந்தையைப் போல் ஒரு அம்மாஞ்சி ராஜா" என்கிற பாடல் வியட்நாம் வீடு என்கிற படத்தில் இடம் பெற்று பட்டி தொட்டியெல்லாம் பாப்புலர் ஆனது உங்களுக்கு நினைவு இருக்கலாம். பல வருடங்களுக்குப்பிறகு "மைகேல் மதன காமராஜன்" என்கிற படத்தில் கமல ஹாசன் பாலக்காடு பாஷையில் வெளுத்துக்கட்டினார். வாரினார் என்று யோசித்தவர்களும் உண்டு. நான் வளர்ந்த ஊரில் பாலக்காடு மனிதர்கள் நிறைய பேர். நாங்கள் இருந்த/ இருக்கிற அடுக்கு மாடி குடியிருப்பில் நிறைய பேர் பாலக்காட்டு மனிதர்கள் தான். தி inscrutable americans என்கிற மாதிரி தி inscrutable palakkad iyers என்று கூட கூறலாம். இவர்கள் அவ்வளவு சுலபத்தில் பழகி விட மாட்டார்கள். பழகினால் உயிருக்கு உயிர் ஆக பழகுவார்கள். ௧. எம் பி ஏ பட்டதாரிகள் படிக்கும் ஒரு பாடம் - POM . இதற்கு PRODUCTION OPERATION MANAGEMENT என்பது தான் விரிவாக்கம். சுவாரஸ்யமான சப்ஜெக்ட் தான். ஆனால் மாணவர்கள் திணறுவார்கள். நிறைய NUMERICALS உண்டு சிலபஸில். டிமாண்ட் போர்க்காஸ்ட்டிங், ல...