கன்னிப்பருவத்திலே (1979 )

 


பாலகுரு என்பவர் இயக்கிய படம். 1979 இல் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிய படம் இது. பதினாறு வயதினிலே படம் எடுத்த எஸ் எ ராஜ்கண்ணு தயாரித்த படம். ஒரு சென்சிடிவ் இஸ்ஸுவை நல்ல விதமாக கையாண்டதற்காகப் பாராட்டியே ஆக வேண்டும்.

சுப்பைய்யா கிராமத்து முரட்டுக்காளை. ராஜேஷ் நன்கு நடித்து உள்ளார். பாத்திரத்துக்கு ஏற்ப சரியான தேர்வு. அப்பா அம்மா இல்லாத அனாதை. கிராமத்தில் சுப்பையாவுக்கு நெருங்கிய தோழன் சீனு (பாக்யராஜ்). சீனு வெளியூரில் படிப்பை முடித்து விட்டு கிராமத்துக்கு திரும்புகிறான். சீனுவின் அப்பா நாட்டு மருத்துவர் ஜி ஸ்ரீனிவாசன் (இவர் டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜாவின் வாழ்க்கைத்துணை). அந்த காலக்கட்டத்தில் இவர் நிறையப்படங்களில் அப்பா ரோலில் நடித்து உள்ளார். கிழக்கே போகும் ரயிலில் சுதாகருக்கு அப்பா இவர் தான்.

கண்ணம்மாவாக வாழ்ந்து உள்ளார் வடிவுக்கரசி. சுப்பையா மேல் காதல் கொள்வதும் அதை சொல்ல முடியாமல் தவிப்பதும் ச்வராஸ்யமாக இருக்கிறது என்றால் அது மிகை இல்லை. தமிழ்க் கதாநாயகிளில் வடிவுக்கரசி வித்யாசனமாவர். நல்ல உயரம். களையான முகம் - கருப்பு நிறமாக இருந்தாலும்.

முதலில் சுப்பையா கண்ணம்மாவிடம் புயலாகச்சீறுகிறார். துண்டைத்திருப்பிக் கொடுக்கும்படி கண்ணம்மாவை மிரட்டுவதில் ஆகட்டும் அவர் வீட்டுக்குச்சென்று கட்டு போட்டுக்கொள்வதும் வீரத்துடன் காளை மாட்டை அடக்குவதில் ஆகட்டும் ராஜேஷின் நடிப்பு நன்கு மிளிர்கிறது. ஜல்லிக்கட்டின் விபரீத விளைவுகளை நாசூக்காக சுட்டி க் காட்டுகிறது படம். ஜல்லிக்கட்டில் காளை மாட்டை அடக்குகிறார் ராஜேஷ் .ஆனால் மாடு அவரைத்தள்ளி விட ஊமை அடி பட்டு அவருக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டு விடுகிறது.

ஒரு வித்யாசமான வில்லனாக பாக்யராஜ். ஒடிசலான சரீரம். அடிக்கடி சிகரெட்டு குடித்துக்கொண்டு ஒரு வித ஸ்வாக் உடன் வலம் வருகிறார் . ஜட்டியுடன் வந்து கஷ்டப்படுத்துகிறார். ஸ்திரீ லோலன் வேஷம்.

ஒரு இரவு வீட்டில் சமைக்கும் போது கண்ணம்மாவின் புடவையில் தீ பற்றிக்கொள்ள அந்நேரம் வீட்டில் இருக்கும் சீனு அவரைக்காப்பாற்றப்போக கண்ணம்மா சீனுவிடம் உரசி ஒரு நிமிடம் தடுமாறுகிறார். பின்னர் படம் முழுக்க வருந்துகிறார். முதலிரவில் கணவனிடம் ஏமாறும் போதும் அதை சமாளிக்கும் விதம் ஆகட்டும் பின்னர் கணவரை உருகி உருகி காதலிப்பதில் ஆகட்டும் வடிவுக்கரசி நடிப்புக் கொடியை நாட்டுகிறார். ஆனால் சுட்டுப் போட்டாலும் அவருக்கு நாட்யம் வரவில்லை என்று நன்கு தெரிகிறது.

அவரே ஓர் பேட்டியில் சொன்ன மாதிரி - டான்ஸ் வரவில்லை என்பதால் வெகு சீக்கிரமாக கதாநாயகி ரோலில் இருந்து கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆக transition பண்ணி விட்டார். ஆனால் கன்னிப்பருவத்திலே படத்தில் அவர் நடிப்பு ரசிக்கும் படி இருக்கிறது. கூச்சமே இல்லாமல் ராஜேஷுடன் கட்டி புரளும் போது அவரது தைர்யம் தெரிகிறது. அந்த காலத்தில் இவ்வளவு போல்ட் ஆக நடித்தவர் பிரமீளா மட்டுமே.

இயக்குனர் ஏ பி நாகராஜினின் மைத்துனி மகளான வடிவுக்கரசி நாகராஜனின் திடீர் மரணத்துக்கு பின் தான் சினிமாவில் நுழைந்தார். ஆனால் ஆசிரியை ஆக வேலை பார்த்து உள்ளார். பின்னர் "ஊர்வசி" என்கிற புடவைக்கடையில் சேல்ஸ் கேர்ள் ஆக வேலை பார்த்துள்ளார். பின்னர் தூர்தர்ஷனில் பகுதி நேர தொகுப்பாளினியாக வேலை. ஒரு அண்ணன். அக்கா சுகுணா. தங்கை மனோன்மணி. ஆனால் குடும்பத்துக்கு ஆக ஓடியது வடிவுக்கரசி மட்டுமே. சில மாதங்களுக்கு அவர் தாஜ் கன்னிமாராவில் housekeeper ஆக கூட வேலை பார்த்துள்ளார்.

பாக்யராஜுக்கும் அவர் பெற்றோர்க்கும் ரசாபாசமாகிவிடுகிறது - அவர் திருமணம் வேண்டாம் என்று சொல்வதால். கண்ணம்மாளின் ஸ்பரிசம் பட்டது முதல் அவளை அடைய த் துடிக்கிறான் சீனு (பாக்கியராஜ்) கண்ணம்மாளுக்கு தர்ம சங்கடம். கணவனின் உயிர் நண்பன் சீனு அவளை படுக்கைக்கு அழைக்கிறான். கணவனுக்கு அவன் மேல் அவ்வளவு நம்பிக்கை. கணவனிடம் சொல்ல முடியாது. தனது கணவன் மலடு என்பதை வாய் தவறி கண்ணம்மாள் சீனுவிடம் சொல்ல அவன் அதை தனக்கு சாதகமாக பயன் படுத்திகொண்டு அவளை மிரட்டுகிறான். கடைசியில் என்ன ஆகிறது? சீனுவின் காமப்பார்வையில் இருந்து கண்ணம்மாள் தப்பிக்கிறாளா இல்லையா? சுப்பையாவின் மலட்டுத்தன்மை நீங்குகிறதா இல்லையா? பாடல்கள் நன்றாக உள்ளன. இசை சங்கர் கணேஷ். படத்தின் முடிவு சற்றே உறுத்தினாலும் விறுவிறுப்பு குறையாமல் போகிறது படம். கட்டாயம் பார்க்கலாம். கணவன் மனைவி அன்யோனத்தை பறைசாற்றும் நல்ல படம் .

Comments

My eBooks

 

     

Popular posts from this blog

Those wonderful terrace memories!

The father who became a star

அந்த ஏழு நாட்கள்