அந்த ஏழு நாட்கள்
அந்த ஏழு நாட்கள் பாக்யராஜின் படங்களிலேயே "அந்த ஏழு நாட்கள்" சிறப்பு அந்தஸ்த்தைப்பெற்ற படம். இந்தப் படம் 1983 வருடம் வெளி வந்தாலும் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. பாக்யராஜ், ஹாஜா ஷெரிப், அம்பிகா, கல்லாப்பெட்டி சிங்காரம், ராஜேஷ் ஆகியோர் இந்தப்படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள். தாலி சென்டிமென்டை தமிழகத்தில் ப்ராபல்யம் செய்ததில் பாக்யராஜுக்கு பெரும் பங்கு உண்டு எனலாம். இன்றைக்கு தாலியின் மகத்துவம் செல்லரித்து போய் விட்டது. வேறு கழுத்துடன் அலையும் தமிழ் பெண்களின் எண்ணிக்கை தான் இன்று அதிகம். கேரளாவில் இருந்து சென்னைக்கு வரும் ஒரு ஏழை இளைஞன் சினிமாவில் இசை அமைப்பாளர் ஆகலாம் என்கிற கனவுடன் வாழ்கிறான். மயிலாப்பூரில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் அவனுக்கும் அவன் கூட வந்த பையனுக்கும் தங்க இடம் கிடைக்கிறது. அந்த வீட்டின் உரிமையாளர் கல்லாப்பெட்டி சிங்காரத்தின் பேத்தி அம்பிகா இந்த அப்பாவி இளைஞனை சீண்டி மகிழ்கிறாள். விரைவில் இருவருக்கும் காதல் மலர்கிறது. விஷயம் விபரீதம் ஆகி விட இருவரும் வீட்டை விட்டு ஓடி காதல் மணம் புரிய விழைகிறார்கள். ஆனால் அம்பிகாவின் வீட்டார் ஆளை வைத்...