Sankaran Kovil
திருநெல்வேலி என்றதுமே எனக்கு நினைவுக்கு வருவது அல்வா மட்டுமல்ல - ஒரு பிரபல சினிமாப் பாடலும் தான். சிறு வயதில் நெல்லைக்கு ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த போது வானொலியில் கேட்ட பாடல் - " அமுதைப் பொழியும் நிலவே - நீ அருகில் வராததேனோ?". திருநெல்வேலி அல்வாவுக்கு கெட்ட பெயரை வாங்கித்தந்த நற்பெருமை சத்தியராஜுக்கு சேரும் என்றாலும் நெல்லை ஊரின் அழகே தனி தான் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை. மண் வாசனை என்ன என்பது நம் சொந்த ஊருக்குப்போன பிறகு தான் தெரியும். 1984 வருடம் நான் பார்த்த தாமிரபரணியையும் இப்பொழுதுள்ள நதியையும் பார்க்கையில் நெஞ்சில் சுரீர் என்கிறது. நவ கைலாசம் மற்றும் நவத்திருப்பதி தரிசினம் பண்ணின பிறகு சங்கரன் கோவில் போக வேண்டும் என்று ஒரு அவா இருந்தாலும் முடியுமா என்று தெரியவில்லை. 2012 வருடம் கோவிலுக்கு சென்று இருந்தாலும் சங்கரன் கோவிலின் மகிமை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அப்படியொரு புண்ய ஸ்தலம் அது. கண் நோய்களைத் தீர்க்க வல்லது. மனப்பிராந்தியையும் நீக்குவதில் சங்கரன் கோவிலுக்கு நிகர் சங்கரன் கோவில் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை...